எமது தேசம் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில், வகுப்பு, இனம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றுக்குஅப்பாற்பட்ட நோக்கத்தை செயற்படுத்த சஜித் முன்வந்துள்ளார். ஒற்றுமை மற்றும்உள்ளடக்கத்தை ஊக்குவித்து கட்டியெழுப்பும் அர்ப்பணிப்புடன், அனைத்து குடிமக்களுக்கும் உரித்துடையதான மற்றும் வாழ்வதற்கு உகந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது முக்கியமானது என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
நீண்ட காலமாக ஒரு சிலருக்கு மாத்திரமே அனுகூலமான கொள்கைகளைக் கொண்டு, இலங்கை இயங்குவதுடன், அதனால் பெருமளவு சமத்துவமின்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமது பயனுக்காக தேசத்தின் ஒழுங்கை சீர்குலைத்துள்ளவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க சஜித் உறுதிபூண்டுள்ளார்.சமத்துவமான கொள்கைகளை இவர் பின்பற்றுவது மாத்திரமன்றி, அனைவரையும் முன்னேற்றி,பகிரப்பட்ட சுபீட்சத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு குரலும் செவிமடுக்கப்படுவதை உறுதிசெய்யும் கொள்கைகளையும் கொண்டுள்ளார்
சஜித் அவர்களின் கொள்கையின் கருப்பொருளாக, பரந்த சிந்தனையின் நம்பிக்கை அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் உறுதியான அடையாளங்களான திறந்த உரையாடல்கள், மதிப்பளிக்கும் நடத்தைகள் மற்றும் சிந்தனைகளின் பரிமாற்றம் ஆகியவற்றை அவர் பின்பற்றுகின்றார். அவரின் நோக்கத்தின் பிரகாரம், மாறுபடும் கண்ணோட்டங்களுக்கும் போதியளவு வாய்ப்பு உள்ளதுடன், ஆக்கபூர்வமான உரையாடல் என்பது ஊக்குவிக்கப்படுவது மாத்திரமன்றி, கொண்டாடப்படுவதாக அமைந்துள்ளது. இந்த வழிமுறையினூடாக எமது ஜனநாயகம் வலிமைப்படுத்தப்படுவது மாத்திரமன்றி, ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிப்பதுடன், பொதுவான நோக்கத்துக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதாகவும் அமைந்துள்ளது.
அனைத்துக்கும் மேலாக, எமது தேசத்துக்கு ஒற்றை அடையாளத்தை ஏற்படுத்துவதற்காக சஜித் தம்மை அர்ப்பணித்துள்ளார். மேம்போக்கான மாறுபாடுகளிலிருந்து விடுபட்டு, பகிரப்பட்ட பெறுமதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் கீழ் ஒருமைப்படுவதாக அது அமைந்துள்ளது. எந்தப் பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த தேசத்தில் அங்கம் பெறுவதையிட்டு பெருமை கொள்வதுடன், அதன் முன்னேற்றத்துக்கு பங்களிப்பதற்கான தமது ஆற்றலில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
பிரகாசமான, அதிகளவு உள்ளடக்கமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு சஜித் உடன் இந்தப் பயணத்தில் இணையுங்கள். ஒன்றிணைந்து, எம்மால், அனைவரும் வெற்றி கொள்ளக்கூடிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.